பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு221

முதலானவர் தங்கியிருந்த இடங்களும் இருந்தன. தொழிலாளிகளும் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதிசெய்த வாணிகர்களும் அந் நகரத்தில் வாழ்ந்தனர். வஞ்சிமா நகரத்தில் கிழக்கு மேற்காக அமைந் திருந்த நெடுஞ்சாலை தொடர்ந்து கடற்கரை வரையில் சென்றது. கடற்கரைப் பக்கமாக, உரோம நாட்டு சக்கரவர்த்தி அகுஸ்தஸ் ஸீசரின் கோயில் கடற்கரையோரத்தில் இருந்ததை முன்னமே கூறினோம்.

முசிறிப்பட்டினத்தின் நடுவில் ஒரு கோவில் இஐந்தது. அந்தக் கோயில் எந்தத் தெய்வத்துக்குரியது என்பது தெரியவில்லை. அந்தக் கோயிலில் இருந்த படிமத்தை (தெய்வ உருவத்தை)ப் பாண்டியன் ஒருவன் கவர்ந்துகொண்டு போனான். பாண்டியன் முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு நகரத்தை வென்று அங்கிருந்த படிமத்தை கொண்டு போனான் என்று தாயங்கண்ணனார் கூறுகிறார்.

வளங்கெழு முசிறி யார்ப்பெழவளைஇ
அருஞ்சமங்கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்49

முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டுப் போர் செய்த செழியன் (பாண்டியன்) அந்தப் போரை வென்று, சேரனுடைய யானைப்
படையில் இருந்த யானைகளைக் கவர்ந்தான் என்று நக்கீரர் கூறுகிறார்.

கொய் சுவற்புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்
களிறுபட பெருக்கிய கல்லென் ஞாட்பு50

முசிறிப் பட்டினத்தில் போர்செய்த பாண்டியன், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனாகத் தோன்றுகிறான். இவனுடைய போர் செய்து தோற்ற சேரன், குட்வன் சேரல் என்று தோன்றுகிறது. குட்டுவன் சேரலுக்குக் கோக்கோதை மார்பன் என்னும் பெயரும் வழங்கியது. குட்டுவன் சேரலாகிய கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கோக்கோதை மார்பனும் சமகாலத்தவர்.

நகரங்களின் அழிவு

சங்க காலத் தமிழகம் கிழக்கு மேற்கு தெற்கு ஆகிய மூன்று பக்கங்களில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கடற்கரை யோரங்களிலிருந்த பல ஊர்களைக் கடல் அழித்துவிட்டது. கடற்கோள்