பக்கம் எண் :

244மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

“பாணன் நன்னாட் டும்பர்”                    (அகம்., 113:17)

என்றும்,

“பல்வேற் பாணன் நன்னாடு”                   (அகம்., 325:17)

என்றும்,

கூறப்படுகிற வாணாதிராயரின் நாடும், தமிழகத்தின் வட வெல்லையில் இருந்ததாகும்.

எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது.

இதுகாறும் ஆராய்ந்தவற்றால், வேங்கடமலைமட்டும் தமிழகத் தின் வடவெல்லை அன்றென்றும், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லையென்றும், இம்மலைகளுக் கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர் முதலியோர் வாழ்ந்து வந்தனரென்றும், இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்தனவென்றும் அறிந்தோம்.