பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 259 |
..... ஆனால், பெரிய சாம்ராச்சியத்தை வைத்திருந்த உரோமர்கள் அராபியரின் வாணிகத்தைத் தடுத்துச் செங்கடல் துறைமுகங்களைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் கீழ்க் கொண்டு வந்தார்கள். அதன் காரணமாக, உரோம சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கிய துறைமுகப் பட்டினங்களின் மேற்பார்வைக்காரர்களாகச் சில அலுவலாளர்களை நியமித்தார்கள். அவ் அலுவலாளர்கள் பெரும்பாலும் கிரேக்கராகிய யவனர்களாக இருந்தார்கள். யவனர்கள் ஆப்பிரிக்காக் கண்டத்திற்கும் அரபி தேசத்துக்கும் இடையில் உள்ள கடலை எரித்ரை கடல் (maris Ery thraei) என்று பெயரிட்டனர். எரித்ரை கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, யவனர்கள் அரபி நாட்டின் கடற்கரை ஓரமாகவும் பாரசீக வளைகுடாவின் கடற்கரை ஓரமாகவும் வந்தார்கள். பிறகு, இந்தியா தேசத்தின் மேற்குக் கரை ஓரமாக உள்ள துறைமுகப்பட்டினங் களுக்கு வந்தார்கள். அவர்கள் பாரசீக வளைகுடாவிற்கும், மேற்குக் கடலுக்கும் (அரபிக் கடல்) எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டார்கள். அரபிக் கடலைக் கடந்து குமரிக் கடலுக்கும் (இந்து மகா சமுத்திரம்), கீழ்க்கடலுக்கும் (வங்காள விரிகுடா) வந்தார்கள். யவனர்கள் இந்தக் கடல்களுக்கும் எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள். அக்காலத்தில் யவனர்கள் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணம் செய்யவில்லை; கரை ஓரமாகவே பிரயாணம் செய்தார்கள். கரை ஓரமாகக் கப்பல் பிரயாணம் ......... நெடுங்காலம் ஆயிற்று. ஆனால், இந்தியர்களும் அராபியரும் நடுக்கடலில் பாய் விரித்துக் கப்பல் ஓட்டிப் பிரயாணம் செய்தார்கள். இவர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணத்தை விரைவாக முடித்துக்கொள்ளும் இரகசியத்தை யவனர்கள் ஆதிகாலத்தில் அறியவில்லை. ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில், இப்பலஸ் (Hippalus) என்னும் பெயருள்ள யவனக் கப்பல் நாவிகன், தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியினால் அரபிக்கடலின் நடுவில் பிரயாணம் செய்து வெகுவிரையில் சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான். அது முதல், யவனர்களும் நடுக்கடலில் கப்பல் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் பருவக்காற்றுக்கு இப்பலஸ் |