பக்கம் எண் :

260மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

என்பவன் பெயரையே பெயராக வழங்கினார்கள். இப்பலஸ் பருவக் காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவன வியாபாரம் தமிழ்நாட்டுடன் அதிகமாவும் விரைவாகவும் நடைபெற்றது.

யவனர்கள் தமிழ்நாட்டுடன் கப்பல் வாணிகத் தொடர்பு கொண்டது கி.மு. முதல் நூற்றாண்டில். இந்த வியாபாரத் தொடர்பு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நீடித்திருந்தது. அதாவது, கடைச் சங்க காலத்தில், கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் சேர சோழ பாண்டிய நாடுகளில் அக்காலத்தில் இருந்த முக்கியமான துறைமுகப் பட்டினங்களில் வந்து வியாபாரம் செய்தார்கள். .................... மொழி தோன்றவில்லை. தமிழ் மொழி வழங்கிற்று. சேரநாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிப் பட்டினத்துக்கு அருகில் இருந்த முசிறிப் பட்டினம், தொண்டி, வக்கரை முதலிய துறைமுகங்களிலும், பாண்டி நாட்டுலிருந்த குமரித் துறைமுகம் கொற்கைத் துறைமுகம் முதலிய துறைமுகங்களிலும், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறைமுகங்களிலும், தொண்டை நாட்டுச் சேரபட்டினம் (மாவிலங்கை) முதலிய துறைமுகங்களிலும் யவனர்கள் கப்பலில் வந்து வியாபாரம் செய்தார்கள். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள இலங்கையுடனும் வியாபாரம் செய்தார்கள்.

தமிழரின் கப்பல்களும், பாரத நாட்டு ஏனையோரின் கப்பல் களும், அராபியரின் கப்பல்களும் அக்காலத்தில் நடுக்கடலிலும் செல்லத்தக்க தரமுடையனவாக இருந்த போதிலும், அவை யவன ருடைய கப்பல்களைப் போலச் சிறந்த வேலைப்பாடுடை யவை யல்ல. யவனக் கப்பல்கள் நல்ல வேலைப்பாடும் உறுதியும் அழகும் உள்ளன வாக இருந்தன. யவனரின் நல்ல கப்பல்களைக் கண்ட சங்கப் புலவராகிய தாயங்கண்ணனார் என்னும் புலவர் “யவனர் தந்த வினை மாண் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (புறம். 149). மற்றொரு சங்கப் புலவராகிய நக்கீரர் என்னும் புலவரும் “யவனர் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (நெடுநல்வாடை).

யவனர்கள் தமிழ்நாட்டிலிருந்து முக்கியமாக மிளகு, முத்து, நவமணிகள், அகில், சந்தனக்கட்டை முதலிய பொருள்களையும், இலங்கையிலிருந்து இலவங்கம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் முதலிய .............. மாற்று வியாபாரம் செய்யவில்லை. பொன்னைக் கொடுத்துப் பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். இதனால்