பக்கம் எண் :

68மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

சாவா தீவின் வடக்கே அதையடுத்து ‘மதுரா’ என்னும் சிறு தீவு இருக்கிறது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து போய்க் குடியேறின. அக்காலத்துத் தமிழர் தங்கியிருந்த இடமாகையால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. சாவா தீவில் மலைகளிலிருந்து தோன்றி வடக்கே ஓடிக் கடலில் விழுகிற ஆறுகளில் ஒன்றின் பெயர் ஸோலோ என்பது. ஸோலோ ஆறு மதுரா தீவுக்கு அருகில் கடலில் விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகப் பழைய மனிதனுடைய எலும்புக்கூடு அகழ்ந் தெடுக்கப்பட்டது. அது 35,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்பு என்று கூறுகிறார்கள். இந்த எலும்புக் கூடு எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே இன்னொரு எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது முன்னையை எலும்புக் கூட்டைவிட மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த எலும்புக் கூட்டுக்கு ‘ஜாவா மனிதன்’ என்று பெயரிட்டிக்கிறார்கள்.

தமிழர் சாவகம் என்று பெயரிட்ட இந்தத் தீவை வடநாட்டார் யவதிவம் என்று பெயரிட்டிருந்தார்கள். அக்காலத்துச் சீனர் இந்தத் தீவை ‘யெ தீயவோ’ என்று பெயரிட்டழைத்தார்கள். ‘யவதீபம்’ என்பதைத்தான் சீனர் ‘யெ தீயவோ’ என்று கூறி னார்கள். சீன நாட்டார் யவதீவுடன் (சாவா தீவுடன்) இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிருஸ்து சகாப்தத் தின் தொடக்கத் திலேயே வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

சங்க காலத்துத் தமிழர் அக்காலத்திலேயே சாவகத் தீவுடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சாவகத் தீவை அவர்கள் ஆபுத்திர நாடு என்றும் கூறினார்கள் என்பதை மணி மேகலைக் காவியத்திலிருந்து அறிகிறோம். ஜாவா தீவின் தலைநகரம் நாகபுரம் என்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாவகத்தை யரசாண்ட அரசன் பூமி சந்திரனுடைய மகனான புண்ணியராசன் என்றும் இந்த அரசர் பரம்பரை இந்தி அரசர் பரம்பரை என்றும் மணிமேகலை கூறுகிறது.

‘நாக புரமிது நன்னகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன்’                    (மணி, 24: 179-180)

நாகபுரத்து அரண்மனையைச் சார்ந்த சோலையில் தரும சாரணர் என்னும் பௌத்த சமயத் துறவி இருந்தார் (மணி, 25:2) காவிரிப் பூம் பட்டினத்திலிருந்த மணிமேகலை (கோவலன் - மாதவியின் மகள்) பௌத்த மதத்தைச் சார்ந்து பிக்குணியான பிறகு, அப்பட்டினத்திலிருந்து சாவகத் தீவின் தலைநகரான நாகபுரத்துக்குப் போய் அங்கிருந்த தரும