118 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5 |
1. பொ தி ன (ஊ) ர அ த ன என்பது இதன் வாசகம். திராவிடில் இது ‘பொதின ஊர் அதன்’ என்றாகும். இதன் பொருள் ‘பொதின் ஊர் அதன்’ என்பது. 2,3. கூவிரா அந்தாய் வேய அதான, குவிர அந்தாய் வேள் அதன். இது திராவிடில் ‘குவிர அந்தாய் வேள் அதன்’ என்றாகும். இதன் பொருள், ‘(ஆசீவக மதத்தைச் சேர்ந்த) தூய தந்தையான குவிரனும் ஆதனும்’ அடிக்குறிப்பில், இதன் முழு வாசகம் ஒரே ஆளைக் குறிப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார். 4. தீ டா இ ல அ த ன : இது திராவிடில் தி-ட-இல் அதன் என்றாகும். திடியில் அல்லது தீடியில் என்பது மதுரை மாவட்டம் திண்டுக்கல்லுக்கருகில் உள்ள திடியன் என்னும் ஊர். ‘திடியில் ஆதன்’ என்பது இதன் பொருள். 5. அந்தை அரிய என்பது இதன் வாசகம். திராவிடியில் இது ‘அந்தை அரியி’ என்றாகும். இதன் பொருள் ‘தூய தந்தை அரி’ என்பது. 6. தி அ ந தை (இர) வா த ன. இது திராவிடில் ‘தி அந்தை இராவதன்’ என்றாகிறது. இராவதன் என்பது ஐராவதன் என்பதாகும். இந்திரனுடைய ஐராவதம் என்பது. ஐராவதன் என்பது ஓர் ஆளின் பெயர். இரவாதான் என்பது இராவதவன் (யாசிக்காதவன்) என்னும் பொருளுள்ளதாகவும் இருக்கலாம். 7. மதிர அந்தை விஸுவன். இதன் பொருள், மதுரையில் உள்ள தூய தந்தை விசுவன் என்பது. 8. சா ந தா ந தை சா ந தான. திராவிடில் இது சந்தந்தை சந்தன் என்றாகிறது. சந்தன் என்பது இடை எழு வள்ளல்களில் ஒருவன். சந்தன் தந்தை சந்தந்தை. 9. அ ந தை வெ ந த அ தா ன. இதை ‘அந்தை வேந்த அதன்’ என்று படிக்கலாம். வேந்த(ன்) என்பது அரசன் அல்லது இந்திரன் என்பது பொருள். மேலே கூறப்பட்ட எல்லாப் பெயர்களும் ஒரு சமயப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. இவர்கள் ஆசீவக மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும். திரு. ஐ. மகாதேவன் இவ்வெழுத்துக்களைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்.4 |