பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்119

1. அந்தை அரிதி (ஓர் ஆண் மகன் பெயர்)

2. அந்தை இரவாதான் (ஓர் ஆண் மகனின் பெயர்)

3. மதிர அந்தை விஸுவன் (மதுரை அந்தை விஸுவன்)

4. அந்தை சேந்த அ தான (சேந்தன் அந்தையினுடைய தானம்)

5. சந்தந்தை சந்தன் (ஓர் ஆண் மகனுடைய பெயர்)

6. பதின் (ஊ)ர் அதை (பதினூர் அந்தை)

7. குவிர அ(ந்)தை செய் அ தான (குவிர அந்தை செய்த தானம்)

8. குவிர அந்தை வேன்-அ- தான (ஒரு வேள் ஆகிய குவிர அந்தை செய்த தானம்)

9. திடி இல் அ தான (திடியில் கிராமத்தவர் செய்த தானம்)

இந்தப் பிராமி எழுத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறோம்: இங்குள்ள பத்துக் கற்படுக்கைகளையும் பத்துப் பேர் ஒவ்வொரு படுக்கையை அமைத்தனர். படுக்கைகளை அமைக்கக் கற்றச்சருக்குப் பொருள் கொடுக்க வேண்டும். பத்துப் பேர் சேர்ந்து ஒவ்வொருவரும் பொருள் செலவு செய்து படுக்கைகளை யமைத்துக் கொடுத்தார்கள். அவர்களுடைய பெயர் படுக்கையில் எழுதப்பட்டுள்ளது. ஆதன் என்ற சொல்லைக் கற்றச்சன் அதன் என்று எழுதியுள்ளான். பிராமி அகர எழுத்தின் நடுவில் வலப் பக்கமாக இட வேண்டிய சிறு கோட்டை இடாதபடியால் அதன் என்று படிக்க வேண்டியுள்ளது. பட்டிப்ரோலு (திராவிடி) வாய்பாட்டின்படி இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன.

1. பதன ஊர் அதன் (பதனூர் ஆதன்)

2. குவிர அந்தை வேள் அதன் (குவிர ஆந்தை வேள் ஆதன்)

3. திடி இ ள அதன் (திட்டி இள ஆதன். திட்டி, ஊர்ப் பெயர்)

4. அந்தை அரிய் (தி) (ஆந்தை அரிதி. அரிதி என்பதில் யகர மெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. அரிதி என்பதில் தி என்பது அடுத்த பெயரோடு சேர்ந்துள்ளது. பிரித்துப் படிக்க வேண்டும்)

5. (தி) அந்தை இரைவதன் (ஆந்தை இரைவதன்)

6. மதிரை அந்தை விஸுவன் (மதுரை ஆந்தை விஸுவன்)

7. சந்தந்தை சந்தன் (சந்தந்தை சந்தன்)

8. அந்தை சந்த அதன் (ஆந்தை சந்த(ன்) ஆதன்)