பக்கம் எண் :

130மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

அகல் விளக்கு

தொன்றுதொட்டுத் தமிழகத்தில் அகல் விளக்கு பரவலாக உபயோகிக்கப்பட்டது. அகல்விளக்கு மண்ணினால் செய்யப்பட்டன. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடைந்து போன அகல் விளக்கு ஓட்டில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. தற்காலமாக அந்த எழுத்துக்களின் முழு வாக்கியமும் அதில் இருக்கிறது. அந்த விளக்கின் உரிமையாளரின் பெயர் அதில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவ் வெழுத்துக்கள் வரி வடிவம் இது:

மு தி கு ழு ர அ ன் அ க ல்

என்பது இதன் வாசகம்.1 முதுகுழூரன் என்பவருடைய அகல் என்பது இதன் பொருள். முதுகுழூரில் இருந்து வந்து இங்கு வசித்திருந்தவர் முதுகுழூரான் என்று கூறப்பட்டார். அவருடைய அகல் இது. முதுகுழூரான் என்பதை ‘முதிகுழுர அன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அகல் என்பது அகல் விளக்கு.

சட்டி

இன்னொரு பிராமி எழுத்து வாசகம் உடைந்து போன சட்டி ஒட்டில் காணப்படுகிறது. இந்தப் பிராமி எழுத்துக்களின் வரி வடிவம் இது:2

சா த் த ன் ஆ வி ஈ நி bச தி ஈ ச ன ஆ தி தை வ னி க - என்பது இதன் வாசகம்.

ஆர்க்கியாலஜி இலாகாவைச் சேர்ந்தவர் இதைச் ‘சாத்தன் ஆவிஇன் கோதி ஈசன் ஆதிதைவன்’ என்று படித்துள்ளனர். கடைசியில் உள்ள ‘க’ இந்த வாசகத்தின் இறுதியை (முற்றுப் புள்ளியை)க் குறிக்கிறது என்று கூறுகிறார். கோதி என்பது கோத்திரம் என்னும் வடமொழிச் சொல் என்று கூறுகிறார். சாத்தன் ஆலியினுடைய