பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்131

உறவினன் ஈசன் ஆதிதைபன் என்பது இதன் கருத்து என்று கூறியுள்ளார்.3

இந்த வாசகத்தினுடைய சரியான அமைப்பு ‘சாத்தன் ஆவிஈ நிதோதி ஈசன் ஆதி தைவ னிக’ என்பது. இது சாத்தன் ஆவி, நிதோதி ஈசன் ஆதிதைவ னிக(ன்) என்னும் மூன்று பேர்களைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது, மூன்று பெயரும் ஒரே ஆளைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம். ஆவி என்பது அக்காலத்து முறைப்படி இகர ஈற்றுச் சொல்லின் இறுதியில் சேர்க்கிற இகரம் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இது ‘ஆவிய்’ என்று எழுதப்பட வேண்டும். இதில் ‘ஆவிஈ‘ என்று எழுதப்பட்டிருக்கிறது.

அலகரை, உறையூர் அகழ்வாராய்ச்சியிலும் பிராமி எழுத்துப் பானை ஓடுகள் காணப்பட்டன. ஆனால் அவை துண்டு துண்டுகளாக இருப்பதனால் வாசகம் சரியாகத் தெரியவில்லை.