பக்கம் எண் :

146மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

விளக்கம் : நல்லி ஊர் என்றிருப்பது நள்ளி ஊர் என்றிருக்க வேண்டும். நிழற்படத்தையாவது மை யொற்றுப் படியையாவது பார்த்து இதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த இரண்டு சாசனங்களில் நள்ளியூர் பி(ட்)டன் கூறப்படுகிறான். ‘நள்ளியூர் பிடந்தையின் மகன் கீரன் கொற்றனும் மகள் கீரன் கொற்றியும் கூறப்படுகின்றனர். இந்தத் தமயனும் தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்து முனிவர்களுக்குத் தானஞ் செய்தனர்.’ இவர்களுடைய உறவு முறை இது:

நள்ளியூர்ப் பிட்டந்தை (பிட்டன் கொற்றன்)
(மகன்) கீரன் கொற்றன் 17 (மகள்) கீரன் கொற்றி 18

முன் கல்வெட்டில் நள்ளி ஊர் என்று படித்தோம். ஆகவே இதுவும் நள்ளி ஊராகத்தான் இருக்க வேண்டும். பிராமி எழுத்து கரத்துக்கும் கரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு என்பதை முன்னமே விளக்கிக் கூறினோம். ல்லி என்னும் எழுத்துக் களின் வலப்பக்கத்தில் தாழச் சிறு வளைவுக்கோடு விடுபட்டிருக்கிறது; அல்லது மறைந்திருக்கிறது. மையொற்றுப் படியைக் கொண்டு அறிய வேண்டும்.

‘ஊர்அ’ என்று அடுத்த எழுத்துக்கள் உள்ளன. என்பது ‘உடைய’ அது, என்னும் பொருள் உடைய வேற்றுமையுருபு எழுத்து. ஊர்+அ என்பதை ஊர என்று படித்து, ஊரைச் சேர்ந்த, ஊரினுடைய என்று பொருள் கொள்ளலாம்.

பிடன் என்பது பிட்டன் என்பதே. டகர ஒற்று விடுபட்டிருக் கிறது. பிடன் என்பது முன் சாசனத்தில் கூறப்பட்ட பிடந்தை (பிட்டனெந்தை)யைக் குறிக்கிறது.

‘குறும்மகள்’ என்பது சிறு மகள் என்னும் பொருள் உள்ளது. பிட்டனுடைய மகள் என்பது பொருள். இதில் மகர ஒற்று மிகையாக எழுதப்பட்டிருக்கிறது. குறுமகள் என்றிருக்க வேண்டும். குறுமகள் என்பதை ஐ. மகாதேவன் மகன்கள் என்று படித்திருப்பது தவறு. மகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் குறுமகள் என்பதை