பக்கம் எண் :

82மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

இவ்வெழுத்துக்களைப் படித்தவர் இவைபற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் கூறுவது.

1. “அந்தை பிகான் மாகன் வேண் தான”.

பிகான் மகனான வேண் இந்த அந்தையைத் தானஞ் செய்தான். (அந்தை - படுக்கை), அந்தை, பிகான் இரண்டையும் ஒன்று சேர்த்து அந்தை பிகான் என்று படித்து, இஃது ஓர் ஆவின் பெயர் என்று கொண்டால், அந்தை பிகான் இந்தக் குகையில் இருந்த துறவியின் பெயர் என்று கூறலாம்.

2, 3. “பொதிலை குவீரன் வேண் குவீர் கொட்டு பிதான்’.

பொதிலை குவீரன் என்பது இக் குகையில் இருந்தவருடைய பெயர். வேன் குவீரன் கொத்துவித்தான். அதாவது வேண் குவீரன் கற்படுக்கையைக் கொத்தி அமைத்தான்.

திரு. நாராயண ராவ் கீழ்வருமாறு படிக்கிறார்.2

1. அந்தை பிகானா மாகனாவே னா தான

2. பொதிலை குவீரனா குவிரனா கொ ட்டுபிதா (பிராகிருதம்)

1. ‘அந்யத்தேயம் பிக்ஷுணாம் மஹதாம் வைஸ்யானாம் தானானி.

2. புத்ரஹ் குபேரானாம் வைஸ்யானாம் குபேரானாம் கொட்டபித(வா) (சமற்கிருதம்).

இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்துப் பொருள் கூறுகிறார். பிக்குகளுக்கு இன்னொரு தானம். பெரிய குடும்பத்தார், வாணிகர்கள், குபேரர்களுடைய மக்கள், வாணிகக் குடும்ப குபேரர்கள் இவற்றை அமைத்தார்கள்.3

திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துள்ளார்.4

1. அந்தைய் பிகன் வேநா அதன்.

அந்தை பிகனுடைய மகன் வேண் அதன் என்பது இதன் பொருள். ஆப்தன் என்னும் பிராகிருத மொழிச் சொல் ஆதன் என்றாகிப் பிறகு அதன் என்றாயிற்று.