பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்83

2. பொதிலை குவிர(ன்)

பொதிலை என்பது ஓர் இடத்தின் பெயர். பொதிகைமலை பொதியில், பொதிகை, பொதியம் என்பது போலப் பொதிலை என்பதும் பொதிகை மலையாக இருக்கலாம். குவிரான் என்பது ஒருவர் பெயர். இப் பெயர் சித்தர்மலை எழுத்திலும் காணப்படுகிறது.

3. செங்கு விரன்.

செம்-செம்மையான, நேர்மையான. குவிரன் - குபேரன்.

திரு.ஐராவதம் மகாதேவன் கூறுவது இது.5

1. அத் தைய் பிகன் மகன் செய்அ தான
            அந்தை பிகன் மகன் செய்த தானம்.

2. பெதலை குவிரன்
           பெதலையைச் சேர்ந்த குவிரன்.

3. செய் குவீரன்
           செங்கு வீரன் இஃது ஒரு ஆளின் பெயர்.

நாம் இவற்றைப் படிப்போம்.

1. அந்தை பிகன் மகன் வேண் அதன்.

அந்தை என்பது ஆந்தை என்னும் பெயர். இப் பெயர் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் நெடுக அந்தை என்றே எழுதப் பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இந்தப் பெயர் ஆந்தை என்று இருப்பதைக் காண்கிறோம். பிகன் என்பது பேகன் என்றிருக்க nடும். சங்க காலத்தில் பேகன் என்னும் பெயர் வழங்கி வந்தது. பிகன் என்பது பேகன் என்பதன் கொச்சை வழக்கு. ஆந்தை பீகனுடைய மகன். வேண் ஆதன். வேண் என்பது ‘வெந்’ என்று எழுதப்பட்டுள்ளது. பிராமி எழுத்து வின் தலையில் குறுக்கு கோடு அமைத்தால் ண் ஆகிறது. குறுக்குக் கோடு இடாமல் எழுதப் பட்டுள்ளது. அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வழக்குச் சொல். ஆதன் என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கியுள்ளது.

2. பொதலை குவிர(ன்)

பொதலை என்னும் ஊரில் இருக்கும் குவிரன் என்பது பொருள்.