பக்கம் எண் :

84மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

3. செங்குவிரன்

இஃது ஓர் ஆளின் பெயர். செங்கண்ணனார் என்பது போலச் செங்குவிரன் என்பதாகும்.

இவர்கள் மூவரும் இங்குள்ள கற்படுக்கையை அமைத்தார்கள் என்பது கருத்து. விக்கிரமங்கலத்து உண்டான கல் குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கிறது. அதைத் திரு. ஐ. மகாதேவன் காட்டியுள்ளார். அவர் காட்டும் அந்த எழுத்தின் வரிவடிவம் இது.

இதை இவர் இவ்வாறு படிக்கிறார்.

‘எம் ஊர் ச அதன் - அ தான’

எங்கள் ஊர் சாதனுடைய தானம் என்பது இதன் கருத்து என்று கூறுகிறார்.6

இவர் படித்துள்ளது சரி என்று தெரியவில்லை. இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கலாம்.

‘ஏம ஊர் சஅதன் அதன்’

ஏம ஊர் என்பது ஓர் ஊரின் பெயர். ச அதன் என்பதைச் சாத்தன் என்று படிக்கலாம். அதன் என்பது ஆதன் என்னும் பெயர். ச அதன் அதன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இது சாத்தன் ஆதன் என்று எழுதப்படவேண்டும். பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களில் பல கொச்சைச் சொற்களும் தவறான எழுத்துக்களும் காணப்படுவது போல இங்கும் இத் தவறுகள் காணப்படுகின்றன.

ஏம ஊரில் வசித்த சாத்தன் ஆதன் என்பவர் இந்தக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார் என்பது இதன் பொருள்.