9. அரிட்டாபட்டி அரிட்டாபட்டியிலுள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டைத் திரு. ஐ. மகாதேவன் கீழ்வருமாறு எழுதியுள்ளார்: 
கிருட்டிண சாத்திரி கே.வி.சுப்பிரமணிய ஐயர், நாராயண ராவ், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் முதல் வரியை (பத்து எழுத்துக்களை) விட்டு விட்டு மற்றவற்றைப் படித்துள்ளனர். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகப் படித்து, வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் : வெ ள (அ) (டை) ய நி கா மா த () கொ (போ) தி ர (ய) கா ஸ் தீ கா அ (ரிதெ) அ ஸா தா னா பி நா க கொடுபி தோ னா கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்து விளக்கக் கூறுகிறார். வெள் அடைய் நிகாமதா கொ பொதிர் யகாஸீ தி கா அரிதாவ ஸாதான் கிணாக கொடு பி தோன். பொதிர் - புத்திரி. நிகாமதாகொ - நகரத்தாருடைய. யகாஸீதி - ஒருவருடைய பெயர். கா அரிதா - செய்வித்தார். பிணாகன் - பிணக்கன். ‘வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யக்ஷாஸ்தி |