பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 87 |
(இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைச் செய்தான்’ என்று பொருள் கூறுகிறார். திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழியாகப் படித்துப் பிறகு சமற்கிருதமாகக் கற்பித்து அதற்கேற்பப் பொருள் கூறுகிறார். அவற்றை இங்குக் காட்டவில்லை. திரு. டி.வி. மகாலிங்கம், சுப்பிரமணிய அய்யரைப் பின்பற்றிக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்.1 ‘வெள் அடைய் நிகமத கொபிதிர் யக ஸிதிக அரிதெ அ ஸதன் பிணக கொடுபி தோன்’. ‘வெள்ளடையில் வாசிப்பவரின் மகளான யகஸிதி என்பவள் (இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைக் கொத்துவித்தான். திரு. ஐ. மகாதேவன், முதல் வரிசைப் பத்து எழுத்துக்களையும் சேர்த்துக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்:2 கணிஇ ந தா ஸீ ரி ய கு வ வெள் அறைய் நிகமது காவி தி இய் கா ழி திக அந்தை அ ஸுதன் பிணாஊ கொடுபி தோன். உங்கு (உவ) வசிக்கிற கணி நதாவுக்கு வெள்ளறை நிகமத்து காவிதி காழிதிக அந்தையின் மகன் இந்தப் பிணாவூ கொடுப்பித்தான். இவர் ஏறக்குறைய சரியாகவே படித்துள்ளார். இவ்வெழுத்துக்களை நாம் படித்துப் பொருள் கூறுவோம். ‘கணிஇ நதா ஸிரி யகுவ் வெள் அறைய் நிகமது காவிதிஇய் காழி திக அந்தை அ ஸுதன் பிணாஊ கொடுபி தோன். மிகையாயுள்ள எழுத்துக்களைத் தள்ளிவிட்டு, விடுபட்ட எழுத்துக்களைச் சேர்த்து இவற்றை இவ்வாறு படிக்கலாம் : |