பக்கம் எண் :

98மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

சாடிகா ந தாநதைய; சாடிகாந சே இய பாளிய” (பிராகிருதம்)

“ கணகாநாம் நாதா(நாம்) ஸ்ரீயக்ஷாணாம் தர்மம்,
இதா நர்திநாம் ஸார்த வாஹகநரம் ஸிம்
ஹலாநாம் ஸ்ரேஷ்டிகா நாம் சைத்ய பாலிகா” (சமற்கிருதம்)

திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்.10

“ காணிய நாந்தாஸிரி யகஅன் தமாம்
இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான்
இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்”

(இவ்வாறு படித்துப் பிறகு இதன் வாசகத்தை இவ்வாறு அமைக்கிறார்)

“ கணிய நந்த - (ஆ) ஸிரிய்க உவன் த(ம்)மம்
இத(உ)அ நெடிஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகள்
தந்தைய் சடிகன் செஇய பளிய்”

(இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகிறார்)

அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தன் என்னும் துறவிக்குப் படைக்கப்பட்டது. நெடுஞ்செழியனின் மைத்துனனும் (ஸாலகன்) (மைத்துனியின் கணவன்) இளஞ்சடிகளின் தந்தையுமான சடிகனால் இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது.

திரு.டி.வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்.11

“கணிய நந்த ஸிரிய் கு அன் ஏமம் இத
நெடிஞ் சழியன் ஸலகன் இளஞ்சடிசன் தந்தைய்
சடிகன் செய் பாளிய்”

(இவ்வாறு படித்துப் பிறகு சில சொற்களுக்கு விளக்கங் கூறுகிறார்) கணி-சோதிடன். நந்த என்பது குபேரனுடைய நிதிகளில் ஒன்றின் பெயர். அல்லது குபேரனுடைய ஓர் ஊழியனின் பெயர். ஸிரிய் என்பது ஸ்ரீ. குஅன் என்பது ஒருவனுடைய பெயர். அது குபேரனுடைய பெயர். இது குஹ்ய, குஹ்யக என்னு இயக்கரைக் குறிக்கிறது. ஏமம் என்பது ஹேமம் என்பதன் திரிபு. இதற்குப் பொன் என்பது பொருள். இவ்வாறு சில சொற்களுக்கு விளக்கங் கூறின பிறகு