பக்கம் எண் :

  

இணைப்பு: 4

புத்தர் புகழ்ப் பாக்கள்

கீழ்க்கண்ட செய்யுள்கள் வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் பழைய உரையிலும் வேறு நூல்களின் உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

1. போதி, ஆதி, பாதம், ஓது!

2. போதி நீழல்
   சோதி பாதம்
   காத லால் நின்று
   ஓதல் நன்றே!

3. உடைய தானவர்
   உடைய வென்றவர்
   உடைய தாள்நம
   சரணம் ஆகுமே!

4. பொருந்து போதியில்
   இருந்து மாதவர்
   திருந்து சேவடி
   மருந்தும் ஆகுமே

5.  அணிதங்கு போதி வர்மன்
   பணிதங்கு பாதம் அல்லால்
   துணிபொன் றிலாத தேவர்
   பணிதங்கு பாதம் மேவார்

6. விண்ணவர் நாயகன் வேண்டக்
   கண்ணினி தளித்த காதல்
   புண்ணியன் இருந்த போதி
   நண்ணிட நோய்நலி யாவே.