168 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9 |
7. மாதவா போதி வரதா அருளமலா பாதமே யோது சுரரைநீ - தீதகல மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த் தாயா யலகிலரு டான். 8. முன்றான் பெருமைக்கண் நின்றான் முடிவெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென் றொன்றானும் உள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தான் அன்றே இறைவன் அவன்தாள் சரணாங்க ளன்றே 9. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு  வரிபாட நீடு துணர்சேர் வாடாத - போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல் கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளும் முயல்வார் வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப வினை சேர்தல் நாளும் இலரே! 10. எண்டிசையும் ஆகி இருள் அகல நூறி  எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து மழைமருவு போதி உழை நிழல்கொள் வாமன் வெண்டிரையின் மீது விரிகதிர்கள் நாண வெறிதழல் கொள் மேனி அறிவனெழில்மேவு புண்டரிக பாதம் நம சரணம் ஆகும் எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார் 11. மிக்கதனங் களை,மாரி மூன்றும் பெய்யும் வெங்களிற்றை, மிகுசிந்தா மணியை, மேனி ஒக்கஅரிந் தொருகூற்றை, இரண்டு கண்ணை ஒளிதிகழும் திருமுடியை, உடம்பில் ஊனை, எக்கிவிழுங் குருதிதனை, அரசு தன்னை, இன்னுயிர் போல் தேவியை,ஈன் றெடுத்த செல்வ மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே யீயும் வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே. |