பக்கம் எண் :

76மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

யானம் முதலியவைகளினாலும் தமது மனத்தில் ஏற்பட்டிருந்த மலினங்களை யெல்லாம் நீக்கிச் சுத்தப் படுத்திக் கொண்டார். அதாவது, சித்த விசுத்தி (மனத்தைச் சுத்தம்) செய்துகொண்டார்.

***

அடிக்குறிப்புகள்

1. பண்டவமலை என்பது வெளிறிய மஞ்சள் நிறமான மலை என்பது பொருள்.

2. மாரன் என்பவன் மனிதரைச் சிற்றின்பத்தில் மனங் கொள்ளச் செய்து பாபங்களைச் செய்யத் தூண்டுபவன்.

3. கிலேசம் - மனக் குற்றம்.

4. அஜபாலன் - ஆட்டிடையன்.