| 116 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12 |
தமதுமேல் இரண்டு கைகளில் சங்குசக்கரம் ஏந்தியிருக்கிறார். கீழ் வலதுகையை அபய முத்திரையாகவும் கீழ் இடது கையை இடுப்பில் தாங்கியும் காட்சியளிக்கிறார். இவருக்குக் காலடியில் இரண்டு பக்கத்திலும் இரண்டு பேர், மண்டியிட்டு அமர்ந்து கையை உயர்த்திக்காட்டித் தோத்திரம் செய்கிறார்கள். இவர்களுக்குமேலே, குறள் உருவமுடைய இரண்டு பூதகணங்கள் ஆகாயத்தில் நின்று கையைநீட்டிக் காட்டித் தோத்திரம் செய்கிறார்கள். மும்மூர்த்தி வணக்கம் மும்மூர்த்தி வணக்கம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்தது. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் மும்மூர்த்தியைத் தம்முடைய பாசுரங்களில் கூறுகிறார்கள். சைவர்கள் மும்மூர்த்திகளில் சிவபெருமானை முதல்வராகக் கூறுவார்கள். வைணவர்கள், திருமாலை முதல்வராகக் கூறுவார்கள். அவரிவ ரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி ஏத்தாதா ரெண்ணில் - பலரும் செழுங்கதிரோன் ஒண்மலரோன் கண்ணுதலோ னன்றே தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.4 என்றும், தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் - யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாம் கடை.5 என்றும் ஆழ்வார்கள் பாடுகின்றனர். “கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்   காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் புண்ணியனைப் புள்ளிருக்கும் வேளூ ரானைப்   போற்றாதே யாற்றநாள் போக்கி னேனே”6 |