தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில் | 239 |
சச்சரவுக் காலத்தில் இக் குகைக் கோயிலிலிருந்த சிவலிங்கங்கள் அப்புறப்படுத்தப்பட்டன போலும். ஏனென்றால் மண்டபத்துக்கு வெளியேயுள்ள பாறைச்சுவரில் பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட வைணவர்களின் சங்கு சக்கரங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. III. தர்மராச மண்டபம் இது கலங்கரை விளக்கம் கட்டியுள்ள பாறையின் தென் கோடியில் இருக்கிறது. இக் குகைக் கோயில், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மண்டகப்பட்டு என்னும் இடத்தில் மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயிலின் அமைப்புப் போன்றது. கிழக்குப் பார்த்த குகைக்கோயில், இதன் மண்டபத்தில் நீளம் இருபத்தோரடி இரண்டங் குலம். அகலம் ஏறக்குறைய பதினான்கரை அடி மண்டபத்துக்குப் பின்னால் மூன்று திருநிலையறைகள் அமைந்துள்ளன. நடுவிலுள்ள திருநிலையறை மற்ற இரண்டையும் விடச் சற்றுப் பெரியது. மண்டபத் தரையைவிட திருநிலையறைகளின் தரை இரண்டடி உயரம் உள்ளது. ஆகவே, அறைகளுக்குள் செல்ல மும்மூன்று படிகள் அமைக்கப் பட்டுள்ளன. 24 சைவ வைணவ சமயக்கலகங்கள் நடைபெற்ற பிற்காலத்திலே, வைணவ சமயத்தவர் இக் குகைக் கோயிலைக் கைப்பற்றி, இதிலிருந்த திருமேனிகளை அப்புறப்படுத்தி, திருநிலையறை வாயில்களில் இருந்த துவாரபாலகர்களின் உருவங்களை உருத்தெரியாமல் செதுக்கிச் சிதைத்து அழித்து, தூண்களில் சங்கு சக்கர உருவத்தை அமைத்து வைத்து, இதற்கு தர்மராச மண்டபம் என்னும் புதிய பெயரையும் கொடுத்தார்கள். இந்தப் புதிய பெயர் தான் இப்போதும் வழங்கி வருகிறது. இந்தக் குகைக்கோயிலைப்பற்றி இரண்டுபட்ட கருத்துகள் உள்ளன. அவை என்னவென்றால்:- இந்தக் குகையின் தூண்கள் முதலிய அமைப்புக்கள் இது மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில் என்று தெரிவிக்கிறபடியால் இது மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோயில் என்பது ஒரு கொள்கை, இக் குகைக் கோயிலின் மண்டபச் சுவரில் பதினொரு வடமொழிச் சுலோகங்கள் பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. இந்தச் சாசனத்தின்படி இக் கோயில் பெயர் அத்யந்தகாம பல்லவேஸ்வரக் கிருகம் என்பது. |