பக்கம் எண் :

248மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12

மகிஷாசுரமண்டபம்

மகிஷாசுரமண்டபம் என்றுபெயர் கூறப்படுகிற இக்கோயிலை மாமல்லபுரத்துக் கிராமத்தார் கயிலாசநாதர் கோயில் என்று கூறுகிறார்கள். மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்குக்கு அருகில் இருக்கிற இக் குகைக்கோயில் வெகு அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. இதன் சில பகுதிகள் முற்றுப்பெற அமைக்கப் படாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. முற்றுப்பெற்ற பகுதிகள் வெகு அழகாகக் கண்ணுக்கினிய காட்சியாக இருக்கின்றன. தரைமட்டத்துக்கு நான்குஅடி உயரத்துக்குமேலே அமைக்கப் பட்டுள்ள இக்குகைக்கோயில், முகமண்டபத்தையும் அதற்குப் பின்னால் மூன்று கருவறைகளையும் கொண்டிருக்கிறது. முகமண்டபம் 32 அடி நீளமும் 15 அடி அகலமும் 121/2 அடி உயரமும் உள்ளது. மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் உருண்டு திரண்டு பதினாறு பட்டையுடையனவாக உள்ளன. இத் தூண்களில் ஒன்றை எடுத்துக்கொண்டுபோய், இதற்குப் பின்புறத்தில் இருக்கிற வராகப்பெருமாள் குகைக்கோயிலில் பிற்காலத்தவர் யாரோ வைத்திருக்கிறார்கள். மற்றொரு தூணையும் பெயர்த்துக் கொண்டு போக முயற்சி செய்ததை அத்தூணின் உச்சியில் உளியினால்