பக்கம் எண் :

100மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

இடங்கொண்ட வேலையு மெழுமலையுந்
     திசை யானையெட்டும்
படங்கொண்ட நாகஞ் சுமந்தவிப்
     பாருமே படருங்கொல்லோ
திடங்கொண்ட சாரனற் சிராமலைக்
     கூத்தன்செம் பொற்கழல்சேர்
நடங்கொண்ட சேவடிக் குஞ்சித்
     தருள்செய்த நானகத்தே.    87

அருள்செய்வதும் படையென் மெய்ம்மையே
     யடியேனுக் கிம்மை
பொருள்செய் துதவும் புதல்வரைத் தந்தென்
     பொல்லாத சொல்லால்
மருள்செய்த மாலை கெண்டானை
     வண்டாருஞ் சிராமலைவா
யிருள்செய்த கண்டனையே தொண்டர்காள்
     வந் திறைஞ்சுனே.     88

வந்திறைஞ்சித் தளர்ந்தேன் செல்லுமோ சிந்தை மாதவர்மேற்
சந்திறைஞ்சிப் படர் சாரற் சிராமலைத் தாழ்ப்பொழில்வாய்க்
கொந்திறைஞ்சிக் கமழ் கோதை சூலாவிக் குழலவிழப்
பந்திறைஞ்சிப் பிடிப்பா ளிடைக்கே சென்று பற்றுய்டதே.    89

தேறுசொல்லாத தமிழ்த்தென் வேம்பய ரண்ணற் செங்குவளை
நாறு மல்லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும்
ஏறு மல்லோனைச் சிராமலை யாளியை யிங்கு . . . . .த்த
னீறுமல்லோர் தம்மை நோக்கவல்லார்க்கென்று நோயில்லை.90

நோயிலங் காதலுடைய நெஞ்சேய் நுரைவெண் கடலுட்
போயிலாங் காபுரஞ் செற்றபொற் றேர்வன் போத்திருந்து
வாயிலங் கார்தரு மந்திரத்தால் வணங்கிப் பணிந்த
சேயிலங் கார்கழற் றீர்த்தன் சிராமலை சென்றடைந்தே.    91

அடைக்குங் கதிர்மணி யாரம் முலைக்கணிந் தல்கின்மெல்லம்
புடைக்குங் கலைபுனைந் தோதியிற் போது புனைந்துவிட்டார்
விடைக்கும் முமைக்கு நற்பகன் சிராமலை மெல்லியலி
ரிடைக்குங் இளையவர்க்கும் பகையோ நும்மை யீன்றவரேய்.    92