| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 99 |
மாதவர் வாழுஞ் சிராமலை மாமணி கண்டாங்கேய் போதுவ ராகிலும் போமடவா யென்ன நிலநடுவே யீதவர் விதியின் றென்பர்போ லிருந்தோங் குணத்தோய் . . . யாவிசொல் லாயவர்பாற் சென்று சொல்லுதற்கேய். 80 சொல்லும் பொருளுஞ் சுவையும் பயனு மிலவெனிலும் அல்லும் பகலு மிகதா மெனக்குப் புரமெரிப்பான் வில்லுங் கணையுந் தெரிந்த பிரான்றன் சிராமலைமே லெல்லுங் கனைகழலின் குணம் பாரித்த வென்கவியே. 81 கவியலைத் துண்ணுங் கலைஞர்தங் காமரறு கார்க்களிற்றின் செவியலைத் துண்ணுஞ் சிராமலை வாழ்நனைச் சேரகில்லார் புவியலைத் துண்ணும் போர்வண் . . . . . வலராய் நவியலைத் துண்ணு மங்காடு நங்கை . . ராடு நண்ணுவரே. 82 நண்ணுதலர் காநற்படு மலரு நறுங் குடுமி விண்ணுதல் போழுஞ் சிராமலை வெற்பனை வேறிருந்து மண்ணுதல் ரடிப்பணிந்த னாமமதை... டக்கயென் ... வல்லார்க் கெளிதிமை யோர்த மிரும்பொழிலே. 83 இரும்பிடைச் சேர்ந்ததெண்ணீர் வளன்மை பெற்றிமை யோரிக்கப் பொரும்படைக் கூரெய்த பொன்மலை யாயைப் புணர்ந்தபின்னைக் கரும்பா . . . . . . . . மிர்துங் களிவளனுஞ் சுரும்பிடைத் தேனுநன் பாலுநின் போலச் சுவையில்லையே. 84 இல்லையென்பார் பொரு ளுண்டெனப் பரிவ விரதிபழஞ் சொல்லுந்தளை யாலவர் இரணங்கள் முன்றின் சுடர்விளக்காத் தில்லையென்பர் தென்சிராமலையா யென்று சென்றிறைஞ்சி வல்லையன்பர்க நெஞ்செயடு .னியின வன்பழிக்கே. 85 பழிக்கும் இருட்படலம் பேரருளன் கையு மஞ்செழுதயு லிழிக்கும் இமையவ ரேறும் மிடத்தெதிர் வந்தருவி தெழிக்குஞ் சிராமலைச் சித்தரைத் தீர்த்த . . . . . யக் கழிக்கும்மிது மெய்ம்மை கைகண்ட யோகங் கடலிடத்தே. 86 |