பக்கம் எண் :

98மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

. . னெறுங் கொன்ற வீரன் சிராமலை யெவினப்பாற்
பூனை நின்றெங்கும் பொரியதிர் தினம் புகுந்தனரே.    73

தினம்புகு கின்றது தண்பணை யாகத்தான் . . . மா
வினம்புகு தேர் நின்றிழிந்து புக்கா ரன்பரென்று . . வுஞ்
சினம்புகு திண்விடைப் பாகன் சிராமலைத் தெய்வமன்னான்
மனம்புகு வெம்பிணிக்கொ . . . . . . .ணந்திட்ட மாமருந்தேய். 74

மருந்தேய் சிராமலை மாமணியே மருதாடமர்ந்தாய்
குறுந்தேய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரேய்
முருந்தேய் முறுவ லுமைகணவா முதல்வா வெனநின்
நிருந்தேய் நிறையழிந்தேன் வினையேன் பட்ட வேழைமையே.75

ஏழைப் புதல்வன் னெனக்குத்
     துணையுமக் கெங்கையையுங்
கோழைக் குரற்பெரும் பாணனையுங்
     கொளக் குன்றர்கொன்ற
வாழைக் குலைமண நாறுஞ்
     சிராமலை வாழ்த்தலர்போல்
மோழைப் பெரும்பேய் செல்லேலு
     நில்லெனுமென் முன்கடையே.    76

கடையகத்துச் சென்று கானிமித்து நின்று கைவிரித்து
நடையகத்துப் பெரி தென்னத் திரிவர் நகுமதிசேர்
சடையகத்துக் கங்கை வைத்தான் சிராமலை சார்வொழிந்து
படையகத்துச் செல்வராய் நல்லாரான . . . . ரே.    77

களகன் னிவனெனப் பாரோர்நகப் பணையின் மடன்மே
லளகந் நுதலி யொருவர் நாட லியானைக்கன்று
மிளகு மடமையின் முளையும் மிளகமென் றேன்பருகிக்
குளகுந் நுகருஞ் சிராமலை சூழ்ந்த குலப்பதிக்கேய்.    78

பதியொற் றிடராற் படுதலையிற் பலி கொள்வதெங்குங்
கதியொற்றி ஊர்வது காசின் மால்விடை காதலியுந்
நதியொற்றி யூர்நகர் நஞ்சுண்பன தந்தலை . . ஞ்ச
மதியொற்றி யூருஞ் சிராமலை மாதவர் வாழ்வகையே.    79