பக்கம் எண் :

114மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

எங்கள் நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை
நங்கை பலகாலும் நகைசெயுமே - கங்கையுறை
கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்ட
தெங்கே யினிமறைப்பா ரென்று.

ஆதிநாதர்

பங்கள ராயர்

இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, காரையூர் கிராமம். மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள ஒரு கல்லில் எழுதப் பட்டுள்ள சாசனம்.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 998 (No. 998. I. P.S.)

விளக்கம் : பங்களராயர் என்னும் தமிழ்ப் புலவரின் வீட்டுப் பெயரைக் கூறுகிறது இந்தச் செய்யுள்.

சாசனச் செய்யுள்

பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற்
சீரா ரகத்தின்பேர் செப்புங்கால் - ஏராருங்
காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும்
பேராளர் தம்முடைய பேர்.

குறிப்பு :- தமிட் புலவன் என்பது தமிழ்ப் புலவன் என்றிருத்தல் வேண்டும்.

சொக்கநாத இலக்கயன்

இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, அம்மன் குறிச்சி, சுந்தரேசுவரர் கோவில், முன் மண்டபத்தில் உள்ள செய்யுள்.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 992 (No. 992. I. P.S.)