பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 117

குத்தினான். வென்ற அரசர், தமது அடையாள முத்திரையைத் தோல்வியுற்ற அரசரின் மார்பிலும் தோளிலும் பொறித்துவைப்பது அக்காலத்து வழக்கம்.

பாண்டியன் வெற்றி

இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. சிகாமணிநாத சுவாமி கோவில் கோபுரவாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ளவை.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 653, 654, 655. (No. 653, 654, 655. I. P.S.)

விளக்கம் : பாண்யனுடைய வீரத்தையும் வெற்றியையும் கூறுகின்றன.

சாசனச் செய்யுள்

மால்விட்ட படைதுரந்மு வடுகெறிந்து
     மகதேசன் வடிவேல் வாங்க
கால்விட்ட கதிர்முடிமே லிந்தரனைப்
     புடைத்ததுமுன் கடல்போய் வற்ற
வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட
     தனிவிலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருவலியு மாங்கேவிட்டு
     நடந்தான் தென்னர் கோவே.

வெற்றுறமுன் வேற்செய்ய கொற்கையர்கோ மாறன்
பரிக்குத்தோற்ற கழல்வளவன் சோணாட்டி - லெற்றும்
புகையாற் குவளையாம் பூங்குமுதம் புண்ணீர்
கயாற்றிற் சேர்கழு நீராம்.

கன்னி வளநாடன் காவேரி நாடாளச்
சென்னி விழுந்தோடுஞ் சேவடிகள் - பொன்இரை
யெரிகாலுங் கான நடந்திச் சென்னியையுங்
கரிகால னாடக்கிடவோ காண்.