பக்கம் எண் :

118மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

பூதானமாக மறவணியேந்தல் எப்போதும் மடை
மீதான வம்பல வாணர்தம் பூசை விளங்கச் செய்தோர்
ஏதாகிலுங் தடை வந்தாலு . . திறல் வாழுங்குரு
மாதா பிதாப் பசுவை . . . . . . . . . . . . . .

குறிப்பு :- இரண்டாம் செய்யுளில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன.

இராமநாத முனிவர்

இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம். இக்கோவிலின் திருவுண்ணாழிகை வாயிலுக்கு தென் புறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : தமிழ் - வடமொழிச் சாசனங்கள், பக்கம் 58. (Tamil and Sanskrit Inscriptions. P.58.)

விளக்கம் : இராமேசுவரக் கோவிலின் ஆடல் மண்டபத்தை சக ஆண்டு 1520-இல் (கி.பி. 1598-இல்) இராமநாத முனிவர் கட்டிமுடித்ததைக் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

சேல்கண்ட வாரி யிலங்கேசன் வெம்பழிதீர முன்னாள்
மால்கண்ட கோயி லிராமீச ராடல்செய் மண்டபத்தை
நூல்கண்ட நற்சக னாயிரத்தோ டைந்து நூற்றிருபான்
மேல்கொண்ட நாளின் முனி ராமநாதன் விதித்தனனே.

குறிப்பு :- சகன் - சாலிவாகன சகாப்தம். முனிராமநாதன் - இராமநாத பண்டாரம் அவர்கள். இந்தத் திருப்பணி, கூத்தன் சேதுபதி காத்ததேவர் என்னும் இராமநாதபுரத்து அரசர் காலத்தில் நிகழ்ந்தது.

இராமநாத முனிவர்

இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம். முதல் பிராகாரம், பிள்ளையார் கோவிலுக்குத் தெற்கில், மேற்குச் சுவரில் உள்ளது.