பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

விளக்கம் : தென்காசி விசுவநாதர் கோவில் கோபுரத்தைக் கட்டத் தொடங்கி அது முடிவுபெறுவதற்கு முன்னர் இறந்துபோன அரிகேசரி பராக்கிரம பாண்டியனுடைய தம்பி குலசேகர பாண்டியன், அக் கோபுர வேலையைத் தொடர்ந்து செய்துமுடித்ததை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

விண்ணாடர் போற்றுந் தென்காசி பொற்கோபுர மீதிலெங்க
ளண்ணாழ்வி செய்தபண யிப்படி குறையாய்க் கிடக்க
வொண்ணா தெனக்கண் டுயர்ந்ததட் டோடெங்கு
                                                                    மூன்றுவித்தான்
மண்ணாளு மாலழகன் குலசேகர மன்னவனே.

குறிப்பு :- அண்ணாழ்வி - தமையன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்

இடம் :பாண்டிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வடபெருங்கோவிலுடை யான் ஆலயத்தின் கிழக்குப்புறம் உள்ள உயரமான கோபுரத்தின் நிலைக்கால் ஒன்றில் உள்ள சாசனச் செய்யுள்.

பதிப்பு : “செந்தமிழ்”, தொகுதி ஐந்து, பக்கம் 438.

விளக்கம் : இந்த கோபுரத்தை மேருமலைக்கு ஒப்பிடுகிறது இச்செய்யுள்.

சாசனச் செய்யுள்

இருக்கோது மந்தணர்சூழ் புதுவாபுரி யெங்கள்பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்
திருக்கோபுரத் துக்கிணை யம்பொன் மேருச் சிகரமென்றே
பருக்கோதலா மன்றிவே றுபமானப் பணிப்பில்லையே.