| 140 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
பெரியான் இடம் : மைசூர், கோலார் தாலுகா, விபூதிபுரத்திலுள்ள ஜலகண்டேசுவரர் கோவிலில் உள்ள சாசன கவி. பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் கோலார் தாலுகா, எண் 131. (Eipigraphia carnatica Vol. X. Part II. Kolar Taluk. No. 131.) விளக்கம் : குவளாலபுரத்து (கோலார்) ஏரியின் கீழ் உள்ள நிலங்களைத் தானம் செய்த பெரியான் என்பவரைப் புகழ்கிறது இச் செய்யுள். இந்தத் தானம், சகரை யாண்டு 1120-இல் (கி.பி. 1198-இல்). விக்கிரம கங்கன் என்னும் அரசன் காலத்தில் செய்யப்பட்டது. சாசனச் செய்யுள் | அலைகடல் உடுத்த மலர்தலை யுலகத் தெண்ணருங் கீர்த்தி இசையா ரதிபன் அண்ணலெங்குந்தை யமான் காதலன் கோதில் . . . . நகரங் | | 5 | குடியேற்றிய ஆதிவணி கேசன் அளகைப் பதியுந் தானுடை யோன். . . . திரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐய்யனருட் சீராசைத் தேவ னுடனவ தரித்த ஆயிழை யாளுய்ய . . ண்டை | | 10 | அருந்ததியே யனையாள் தந்தாய் திருவயிற் றுதித்த துளங்குமணித் திருமார்பன் செங்கமலப் புனல் புடைசூழ் செழுந் தொண்டை வளநாடன் எங்கள் பெரியாற் கிளைய பெரியான் மற்றீண் டுலகில் | | 15 | ஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேற் செப்பரிய நூறு கடந் திருபதுதான் சென்றதற்பின் வென்றிபுனை கடாக் களிற்று விக்கிரம கங்கன் குன்றெறிந்த கூரிலைவேற் கொற்றவனை யிடுவித்துக் கொத்தலரும் பூம்புனல்சூழ் | |