| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 141 |
| 20 | குவளாலத் தேரிதனில் உத்தமத்தே நீர்நில மற்றொரு வெலயு மாளு சோலை யதனுக்கு வடமேற்கே விடுவித்துத் திருச்செல்வம் பல பெருக்கிச் சி . . லியு முப்பொழுதுங் கருத்தமைய | | 25 | வெழுந் தருளும்படி நிமந்தங் கட்டுவித்துச் சந்திரா தித்தவரை திருப்புகழ் நிறுத்தி நிந்த ளுரிலத் தினிதுவாழ் கெனவே. | ஸ்ரீ மாஹேஸ்வரரும் ஐந்நூற்றுவரும் ரக்ஷை. குறிப்பு :- வரி 4. குவளால மாநகரம், இப்போது கோலார் என்று வழங்கப்படுகிறது. வரி 21. வெலயுமாளுசோலை என்னும் சொல்லின் சரியான உருவம் தெரியவில்லை. கடைசி வரியில், நிந்தளுரிலத்தினிது என்றிருப்பது, ‘இந்த நானிலத் தினிது’ என்றிருக்க வேண்டும். செட்டிதேவன் இடம் : மைசூர், சிந்தாமணி தாலுகா, உபாரப்பேட்டைக் கிராமத்தில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : கர்னாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் சிந்தாமணி தாலுகா, எண் 83. (Eipigraphia carnatica Vol. X. Inscriptions in Grantha and Tamil. No.83) விளக்கம் : சக ஆண்டு 1101-இல் (கி.பி. 1179-இல்) செட்டி தேவன் என்பவர் தம் பெயரால் செட்டீச்சரம் என்னும் கோவில் அமைத்து அதில் சிவபெருமானை எழுந்தருளுவித்து அக் கோவிலுக்கு நிலபுலங்களைத் தானம் செய்ததைக் கூறுகிறது இந்தச் சாசனம். சாசனச் செய்யுள் | தேனாருஞ் செங்கமல மாதுபுணருந் தோளான் கானாரும் விந்தைமகன் காதலாம் பூநாடும் வண்டறியாத் தாமரையோன் தன்மரபில் வந்துதித்த கண்டன் கவுண்டல்லிய கோத்திரத்தான் எண்டிசையும் | |