| காணியதுவுங் கொடுத்து கல்வெட்டி நீணிலத்துக் கொங்காளுஞ் சோலைசூழ சோழன் . . . பொரான கொங்கர் கோடி மங்கலமுடை . . . . . ந்தாங்கு |
| 40 | கழதில்லைப் பிரான் அரிவாட்டத்தா யாண்டாரற்கு கோயில் மல்லைனெதிமாடா பத்தியங்கொடுத்து சொல்லரிய பாரசிவன் பம்மனுக்குப் பல்லியங்கள் வாசிக்கப் பேராப் பெருங்காணி தான்குடுத்து சீரார் திருவாபரணம் பொன் ஐங்கழஞ்சாற் பட்டம் |
| 45 | பொருமால் விடையோற்கு . . . . . . . ரும் வேற்றுப் படாத பரிகல பரிச்சின்னம் நூற்றுப்பல வெண்கலம் அளித்துத் தோற்றிய நற்சந்தி மூன்றினுக்கு நல்விளக்கோர் பத்தாக்கிக் கற்செக் கிரண்டில் . . . யாண்ணை தாங் கொடுத்துக் |
| 50 | கோங்கி . . . .ங்கோலப் பொழில் புடைசூழ்கொத்த நூருங் கிறையுந் தாலவ . . துச் சாலநல் சொக்க சமுத்திரத்திற் சோமபாதியுங் கொடுத்து ....க்கும்விதற செட்டில் ஆமுதகட்டும் மாதகட்டும் நீக்கியபின் கொல்லை யிருகண்டகமுந் தானங் கொடுத்து |
| 55 | எல்லையலாத் தன்ம மியற்றியபின் பல்லவையோர் சொல்லார் புகட்தன்ம . . லையிது சோரா பேய்கள் மேலெழுதுங் கணக . . . . . சொல்லார்ந்த முத்தமிழோர் தாம்புகழு மூன்றுநாட்டு மண்டலிகன் அத்தநெறி ....க்கோ ராகரமாம் நித்தந்தருவார் கொடைத்தடக்கைத் |
| 60 | தூயிந் துட்டர்கண்டன் திருவாய் மொழிந்தருளக் கேட்டு இருமா . . ஞ் சொற்புலவோர் தாம் பு . . . தலூர் மன்மறையோன வித்தகநற் பூந்துழாய் மார்பனுக்குச் சித்தந் தளராதவன் பி . . . . .செம்பொனருள் நம்பெருமாள் அளவிலி அறிஞன்ற னெழுத்து பின்னும் |
| 65 | பிழையாத வாய்மைப் பிரமதராயன் செட்டி மழையார் முகில்அங்கை மாதானி பழைய மறையாலுங் காணவொண்ணாப் பாதன் அரன் திருமேனி கோயில் குறையா திலக்கணங்களாற் சமைத்த அறிஞன் அருள்கூர்ந்த நெஞ்சினோன் |