| 144 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
| 70 | . . கிம . . . த்தனமா பொன்பெருகு புகட்சங்கர செட்டிப்பெயர் இராயாசாரி யென்னு பெயர் சிட்டர் பலர் செப்பச் சிறப்பித்து மட்டுலவு சீரார் பொழிற் . . . ன்ற கிறைக்குத் தெற்கிற் கிலேரி சிட்டங் கிறையுங் கொடுத்தான் | | 75 | இத்தன்மங்கள் சந்த்ரா தித்தியவ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . | குறிப்பு :- இச்செய்யுளின் இடையிடையே எழுத்துக்கள் மறைந்துவிட்டபடியால் சில இடங்களில் செய்யுளடியைச் சரியாக அமைக்க இயலவில்லை. இறுதியிலும் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. ஆரியச் சக்கரவர்த்தி இடம் : இலங்கை, கொழும்பு நகரத்துப் பொருட்காட்சி சாலையில் உள்ள ஒரு கல்லெழுத்துச் சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண். 1413. (No. 1413. S. I. I. Vol. IV. ) விளக்கம் : இலங்கையை அரசாண்ட சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவனை இந்தச் செய்யுள் புகழ்கிறது. சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழர் ஆவர். ‘சேது’ என்பது இவர் களுடைய ஆணைப்பெயர். இவர்களுடைய காசுகளில், படுத்திருப்பது போன்ற எருது உருவமும், ‘சேது’ என்னும் எழுத்தும் பொறிக்கப் பட்டிருந்தன. இந்த அரசர்கள் இடைக்காலத்திலே, இலங்கையின் சில பகுதிகளை அரசாண்டார்கள். சாசனச் செய்யுள் சேது கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மடமாதர் தாம். |