தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 147 |
900 வரையில் அரசாண்டான். இவனைப் பராந்தக மகாராசன், மகரகேதனன், கோச்சடையன், ஸ்ரீநிகேதனன் என்று இச் சாசனம் கூறுகிறது. சாசனச் செய்யுள் | ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழு மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்காப்ப விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின் றண்ணிழற்கீழ் ஸஹஸ்பரண மணிகிரணம்விளக்கிமைப்ப | 5 | புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப் பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப் பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச் | 10 | சோதிமர கததுளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு சடைமுடிஓ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின சதுர்ப்புஜன்சதுர் வ்வக்த்ரந் சதுர்வ்வேதிசதுர்த்வயாக்ஷந் மதுக்கமழ் மலர்க் கமல யோனி மனந்தந்த மாமுனிஅத்ரி | 15 | அருமரவிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணி லிருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணந் வெளிப்பட்டனன் மற்றவற்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்கு கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்தி | 20 | பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின் பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலுவியசெழு மகரக்குலம் விசைஒடுவின் மீன்னொடு மிக்கெழுந்த கடற்றிரைகள் | |