25 | சென்றுதன்சே வடிப்பணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விக்ஞாபணை யும்பெறலரு நகுஷந்மத விலாசமும் வஞ்சத்தொழில் வாதாபி சீராவியு மஹோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுநேதுசுதை சுந்தரதையு மொருங்குமுன்ன மடிநண்ண சியோமேனி உயுதலத்தோன் |
30 | மடலவிழ்ஆ மலுய்த்து மாமுனிபுரோ கிதன்னாகக் கடல்கடைந் தமிர்துண்ணவுங் கயலிணைவட வரைப் பொறித்தும் ஹரிஹயந தாரம்பூண்டு மவன்முடிஒடு வளைஉடைத்தும் விரிகடலைவே லின்மீட்டும் தேவாசுரச் செருவென்றும் அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடைய வேந்தழித்துந் |
35 | திசவதனன் .......நினுக்குச் சந்துசெய்துந் தார்த்தராஷ்டிரர் படைமுழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வாணர் அநுஜன் வசுசாப மகல்வித்தும் ....தொன் னகரழித்தும் பரிச்சந்தம் பலகவர்ந்தும் நாற்கடலொரு பகலாடியும் கோடிபொன் னியதிநல்கிக் |
40 | கலைக்கடலைக் கரைகண்டுபொன் பகடாயிரம் பரனுக்கீயும் உரம்போந்ததிண் டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும் பொன்னிமயப் பொருப்பதனில் தன்னிலையிற் கயலெழுதியும் வாயல்மீ மிசைநிமிர்ந்து பலவேண்டி விருப்புற்றுங் காயல்வாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் |
45 | மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத்தமிழ்வளர்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின் |