| மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையம் பலசெய்துஞ் சேறுபடு வியன் கழனித் தென்விழிஞ நகர்கொண்டுங் |
80 | கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசை கொண்டும் எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறத்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தி லியற்றுவித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் |
85 | வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கரிரார்கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகைகண் டகோன் (கண்டன்) மதுராபுர பரமேஸ்வரன் மாநிநீமகர கேதநன்மகன் செங்கோல்யாண்டு ஆறாவதின் மேல்நின்ற தொடர்யாண்டில் பொன்சிறுகா மணிமாடப் புரந்தரனது நகர்போன்ற |
90 | களக்குடிநா டதனிற்படுங் களக்குடிவீற் றிருந்தருள ஆசிநா டதனிற்படும் பிரமதேய மகன்கிடக்கைத் தேசமலிதிரு மங்கலமிது பண்டுபெரு நலனுட் படுவதகைப் பாங்கமைந்த குடிகளது காராண்மை யொடெழுந்த முதுகொம்பர்க் கொடைமுந்து கிடந்ததனைக் |
95 | கற்றறிந்தோர் திறல்பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரடோண் மாக்கடுங்கோன் மான்பேர்த் தளியகோன் ஒன்றுமொழிந் திரண்டோம்பி ஒருமுத்தீ யுள்பட்டு நன்றுநான் மறைபேணி ஐய்வேள்வி நலம்படுத்து அறுதொழிற்கள் மேம்பட்டு மறைஓர்பந் நிருவர்க்குக் |
100 | காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் செப்பேடுசெய்து குடுத்தருளினன் தேர்வேந்தநின் குல முதல்வன் மைப்படுகண் மடமகளிர் மணவேள்மனு ஸமானன் வழுவாத செங்கோனடவி மண்மகட்கொரு கோவாகிக் கழுதூரில் சித்திசெய்த கடிக்கூட னகர்காவலன் |