160 | அமரர்க்கு மறிவரிஓன் வேகவெள் விடைபாரதி பீஷ்மலோ சனன்மகிழ்ந்து(ங் கோல்)பெய்வான் றிருவிருப்பூர் முழிநின்று தென்கிழக்கு நோக்கிப்போயின வெள்ளாற்றுக்கும் ஆயினபெரு நல்லூர்ச்சிறைக்கும் பன்கள்ளி முரம்புக்கும் வண்ணத்தார் வளாகத்தின் நன்குயர்பரம் பீட்டுக்கும் |
165 | நலமிகுகள் ளிக்குறிச்சி மேலைக்கள்ளி முரம்புக்கும் மேற்குநடை யாட்டிகுளத்தில் சாலநீர் கோளுக்கும் இக்குளத் தின்தென் கொம்பின் மறுவாக்கும் பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடி நடைஏரி ஓங்கியவன குளத்தகம் பாலலையொழுகிய வனபெருப்புக் |
170 | இப்பெருப்பை, ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும் மேக்கும் தென்னெல்லை |
175 | திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி ஏரியணை வடகடைக் கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும் நீருடை அரைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென்கடைக் கொம்புக்கும் நெடுமதிற்கற் றாழ்வுக்கும் நீர்மாற்றுந் திடலுக்கும் |
180 | கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடமேலெல்லை கூற்றன்குழி மீழ்குழியேய் போயினபடு காலுக்கும் போற்றரு மாருதமாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும் நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய் காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில் |
185 | லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சுறநாட் டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்குமன் வடவெல்லை வளமிக்க மருதலி இளநெச்சுறத் தெல்லைக்கும் வெள்ளாற்றுக்கும் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லை உண்ணிலமொன் றொரியாமல் |