பக்கம் எண் :

154மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

190 காரண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச்
சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டித்
தருமங்களி ரொன்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும்
தொல்லைவண் சோமாசி குறிச்சிமல்லன் மாமறையோர்க்கும்
பிரமதேய ஸ்திதிவழாவகைய்ப் ப்ருதுவியின் கண் ணிலைபெறுத்து
195 தர்ம்மப ராயணனாகிய தராபதிகொடுத் தருளிப்பின்
ஈண்டியபெரும் புகழேயுங் சாண்டில்ய கோத்திரத்து
எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து
வரிவண்டு மதுநுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து
செப்பரிய செழுஞ்செல்வத்துப் பமவிரால் மேதக்க
200 கலைபயில் க'99ஸ்வாமி பட்டற்கு தற்பெருமா மதலை
உலவுகீர்த்தி யோகேஸ்வர பட்டற்கு விசிஷ்டனாகிய
திருவடிச் சோமாசி யென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த
திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேஸ்வரன்
வேதவே தாந்தங்களும் விவிதாசாரமும் தன்னோடுபிற
205 ரோதிக்கேட்டு தரம்பெய்த நீரைக்காமா சால்யனாகி
பெருந்தகைப் பிரமதேய மிதற்கு பிரஸஸ்தி செய்தோற்கு
திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புணற் பருத்திவயக்கலும்
இவ்வயல்களிக் கிணறிரண்டும் அக்கிணற்றால் விளைநிலனும்
மற்றவ்வூர் மாசபைஓர் பெற்றபரிசேய் கொடுத்தபின்
210 சீரியசெழுமம் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை
ஆரியம்விராயத் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய
கற்பமைந்த கரதலத்துச் சிற்பமார்த் தாண்டற்கும்
மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ்கண்ணங் கீரன்வயக்கல்
திருவுலகு நற்சிங்க குளவளால் மருவியசோ
215 மாசிவயக்கல் லென்னும் வயல்கடிளிற் கிணறுகள்ளொரு
மூன்றும் எக்காலமும் மன்னுக்கிணற்றில் வயலனைத்தும்
இறையிலி யாகவும் சொல்லிய இக்கிணறு