பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 197

களில் (பௌத்த ஆலயங்கள் அல்ல - இந்து தேவாலயங்கள்) பூசை செய்ய நியமித்தார்கள், நாளடைவில், காலப் போக்கில், இவர்கள் உப்பலவண்ணனை விஷ்ணுவாக மாற்றிவிட்டனர். தேனவரை நகரத்திலும் பார்ப்பனர் குடியிருந்த செய்தி சாசனங்களினால் தெரிகிறது.

தேனவரையில் இருந்த (உபுல்வன்) உப்பலவண்ணனைப் பிற்காலத்தவர் தேனவரை ஆழ்வார் என்றும், தேனவரை நாயனார் என்றும் பெயரிட்டழைத்தனர். சிங்களவர் தேவுந்தர தேவியோ (தேவுந்தர நகரத்துத் தெய்வம்) என்று வழங்கினார்கள்.

கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தேனவரை நாயனார் கோவில் சீனநாடு வரையில் புகழ்பெற்றிருந்ததென்பதை இந்தச் சாசனத்தினால் அறிகிறோம். (இந்நகரத்தில் முற்காலத்தில் இருந்த வருணன் (உபுல்வன்) கோயிலைப்பற்றியும், வருணன் வழிபாட்டைப் பற்றியும் முன்னைய ‘பொழில்’களில் கூறியுள்ளேன்).

1. ஸ்வ(ஸ்தி) ... ... ... ... ... ... .... .... ...

2. இரா சாதி ராச பரமேசுரன் பூர்ண சந்திரப் பிரகாசன் சீனத்தில்

3. மஹாஇராச இலங்கா ராச்சியத்தில் நாயினார் தேநவரை

4. நாயினார்க்குத் திரு முன் காணிக்கையாக நாயினார் பிரகா

5. சங்கேட்டு தூதர் சிங்வோ உவிங்சுயிங்ங் கையி

6. லே வரக்காட்டினதுII இப்பாசிதம் கேட்ப்பதுII இ

7. ந்தப் புவனத்திலுண்டான பிராணிகளெல்லாம் நாயி

8. னார் கிருபையினாலே சுகமே பரிபாலியா நின்றதுII ஆங்கு வரு

9. கிற ரோங்கும் மனித்தரும் தேநவரை நாயினார் திரு அரு

10 ளத்தால் ஒழிந்தாண்டரையேயாள் நின்றதுII இப்படியை

11. த் தேனவரை ஆழ்வார்க்கு காணிக்கை ஆக காட்டினதுII

12. ஆகப்படி பொன் வெள்ளி துலக்கி பட்டு சந்தனம்

13. எண்ணைக் காப்புப் பல காணிக்கைக்கு வகை பொன் ஆயிரம் க

14. ழஞ்சு வெள்ளி அய்ஞ்சாயிரக் கழஞ்சு பல நிறத் துலக்கி அய்ம்பது பல