பக்கம் எண் :

198மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

15. நிறப் பட்டு அய்ம்பது பொன் எழுத்து (காசதார)த் தூசஞ் சுவடு நாலு

16. ந்த சுவடு இரண்டு நீலத் தூசஞ் சுவடு இரண்டு பழஞ் செப்பு சிவ தூபம்இ

17. டுகிற செப்புப் பாத்திரம் அஞ்சு பூக்குத்துகிற செப்புக்

18. கெண்டி பத்துக் கறிக்கால் பத்து குத்து விளக்கிச் சாவான் அஞ்சு கறி

19. க்கால் அஞ்சு மரத்தாலே பொன் பூசின தாமரைப்பூ சுவடு ஆறு

20 அகில் வைக்கிற பொன் செப்பு அஞ்சு மெழுகுதிரி சுவடு பத்து

21. எண்ணை இரண்டாய்ரத்து அஞ்ஞூறு கட்டி சந்தன முறி

22. பத்து ஆக இவ்விசைப் படியாலுள்ளது ......நாயினார்

23. தேனவரை நாயினார்க்கு திரு முக்காணிக்கையாகக் குடுக்கவும் II

24. யுங்லொக்கு யாண்டு ஏழா யிரண்டா (ம்ம) டிII1

குறிப்பு :- 6-ஆம் வரி “இப்பாசிதம் கேட்பது” என்பதில் பாசிதம் என்பது பாஷிதம் என்னும் சொல்லின் திரிபு. 8,9 ஆம் வரி “வருகிற ரோங்கும்” என்பதை “வருகிறவ ரோங்கும்” என்று வாசிக்கவும். 12, 14 ஆம் வரிகளில் வருகிற “துலக்கி” என்பது பட்டுத் துணியைக் குறிக்கிறது போலும். 13, 21ஆம் வரிகளில் வரும் “எண்ணை” என்பதனை “எண்ணெய்” என்று வாசிக்கவும். 15ஆம் வரியில் “தூசம்”, என்பது துவசம் என்பதன் திரிபு போலும். துவசம் = கொடி. மேற்படி வரியில் “சுவடு” என்பது இரட்டை எனப் பொருளுள்ள சோடி என்பதன் திரிபாக இருக்கலாம். 21ஆம் வரி இரண்டாயிரத்து அஞ்ஞூறு கட்டி என்று வாசிக்கவும். கட்டி என்பது முகத்தல் அளவை. சீன நாட்டுச் சொல்லாகிய “சட்டிஸ்” என்பதன் திரிபோலும். சந்தன முறி = சந்தன மரத்துண்டு.

அடிக்குறிப்புகள்

1. Epigraphia zeylanica Vol. III.