தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 207 |
14. க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத்தெடுப்பி 15. க்கின்ற சூளாமணிபன்மா விஹாரத்துப் பள்ளிக்கு இருப்பதாக யாண்டு இருபத் 16. தொன்றாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக்குடுக்க 17. வென்று நாம் சொல்ல நம் ஓலை எழுதும் நித்தவிநோத வளநாட்டு ஆ 18. வூர்க்கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தக்காரன் எழுத்தினாலும் நம்ஓ 19. லை நாயகன் உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தச் சதுர்வே 20. திமங்கலத்து கிருஷ்ணன் இராமனான மும்மடி சோழ பிரஹ்ம மஹாராயனும் நித்த (இரண்டாம் ஏடு, முதல் பக்கம்) 21. வினோத வளநாட்டு பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்ல 22. வயனான மும்மடி சோழ போசனும் அருமொழி தேவவள நாட்டு நென்மலி நாட்டுப் பரு 23. த்திக்குடையான் வேளான் உத்தமசோழனான மதுராந்தக மூவேந்த வேளானும் 24. ஒப்பினாலும் புக்க நந்தீட்டினபடியே வரியிலிட்டிக் கொள்கவென்று 25. நம் கருமமாராயும் ஆரூரன் அரவணையானான பராக்கிரமசோழமூவே 26. ந்த வேளானும் தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளானு 27. ம் அருங்குன்ற முடையான் மாப்பேறன் பொள்காரியும் நடுவிருக்கும் புள்ள 28. மங்கலத்துப் பரமேஸ்வரபட்ட சர்வ்வகிரது யாஜியும் கடலங்குடித் தாமோதர பட்டனு |