பக்கம் எண் :

208மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

29. ம் நம் கருமமாராயும் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுத் திருநரையூர் நாட்டுக்கற்குடை

30. யான் பிசங்கன் பாளூரான மீனவன் மூவேந்த வேளானும் அருமொழிதேவ வளநாட்டு

(இரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

31. ப் புறங்கரம்பைநாட்டு வங்கநகருடையான் சங்கரநாராயண அரங்கனும் நடுவி

32. ருக்கும் வெண்ணைநல் லூர்த் தம்மடிபட்டனும் பசலைத் தியம்பகபட்டனும் சொ

33. ல்லப் புரவுவரிக் கிளிநல்லூர் கிழவன் கொற்றன் பொற்காரியும் கழுமலமுடை

34. யான் சூற்றியன் தேவடியும் பழுவூருடையான் தேவன் சாத்தனும்

35. கள்ளிக்குடையான் அணையன் தளிக்குளவனும் வரிப்பொத்தகம் சா

36. த்தனூருடையான் குமரன் அரங்கனும் பருத்தியூர் கிழவன் சிஃகன் வெ

37. ண்காடனும் இருந்து யாண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூhற்றா

38. றினால் பள்ளிச்சந்தம் இறையிலியாக வரியிலிட்டுக் குடுத்த தங்கனாட்டுப்பட்டன

39. க் கூற்றத்து ஆனைமங்கலம் அளந்தபடி நீங்கல் நீக்கி நிலன்தொண் ணூhற்றே

40. ழேயிரண்டு மாக்காணி யரைக்காணி முந்திரிகைக் கீழ்மூன்றுமா முக்காணி

41. முந்திரிகை கீழரையே யிரண்டுமாவும் பிடிசூழ்ந்து பிடாகை நடப்பிப்பதாகக் கண்காணிநடு