பக்கம் எண் :

234மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

20. ரைக் காணியினால் காணிக்கடன் நெல்லு
      இரண்டாயிரத்தெழு நூற்றெழுபத்தொன்பதின் கலனே
      தூணி

21. நாநாழி நிச்சயித்த நெல்லு ஆயிரத்தெண்ணூ ற்றுக் கலமும்
      திருவாரூர் கூற்றத்து ஆமூர் நிலம்

22. நூற்றாறே மாகாணியில் காணிக்கடன் நெல்லுப்
     பதினாயிரத்தறுநூ ற்றுக்கலனே இருதூணிக்

23. குறுணி அறுநாழி நிச்சயித்த நெல்லு
      ஐயாயிரத்தொண்ணூ ற்றை ம்பதின் கலமும் அளநாட்

24. டு கடகுடியான நாணலூர் நிலம் எழுபதே முக்காலே
      நான்மாவரை யினால் காணிக்கடன் நெ

25. ல்லு ஆயிரத்தைஞ்ஞூ ற்றொருபத்து நாற்கலனே
      ஐங்குறுணி ஒருநாழி நிச்சயித்த நெல்லு இரண்டா

26. யிரத்தொண்ணூ ற்று நாற்பதின் கலமும் இன்னாட்டுக்கீழ்ச்
      சந்திரப்பாடி நிலம் பத்தே இரண்டு மாகாணி

27. அரைக்காணி முந்திரிகை கீழ்முக்காலினால் காணிக்கடன்
      நெல்லு ஆயிரத் தொருபத்திருகலனே ஐங்குறுணியும்
      இன்னா

28. ட்டுப் பாலையூர் பிரமதேயம் நிலம் அறுபதே முக்காலினால்
      நெல்லு ஆயிரக் கலம் நிச்சயித்த நெல்லு ஆயிரத்தை

29. ஞ்ஞூற்று கலமும் ஐயங்கொண்ட சோழ வளநாட்டுக்
      குறும்பூர் நாட்டுப் புத்தக்குடி நிலம் என்பத்தேழே

30. காலினால் காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்தெழு
      நூற்றிருபதின் கலனே தூணி நாநாழி நிச்சயித்த நெல்லுஆ

(இரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

31. றாயிரத்தொருநூற்றெழு கலமும் விஜயராஜேந்திர சோழ
      வளநாட்டு இடைக் கழிநாட்