பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 235

32. டு உதையமார்த்தாண்ட நல்லூர்நிலம் மூன்றே மாவினால்
      நெல்லு நூற்று

33. முப்பத்தைங்கலனே முக்குறுணி முன்னாழி இது
      வரிசைப்படி இறை

34. க் கட்டுத் திருவாய்மொழிந்தருளினபடி நெல்லு
      எழுபத்தெண் கலனேய் ஐங்குறுணி

35. இதில் இப்பள்ளிக்குப் பாதியும் இவ்வூர்களில் பல
      பாட்டங்கள் உள்ளிட்ட அந்தராய

36. மும் பன்மை பண்டவெட்டியும் உட்படக்கடவ காசும்
      நெல்லும் இப்பள்ளிக்

(மூன்றாம் ஏடு, முதல் பக்கம்)

37. கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாக இறையிலி
      இட்டமைக்கும் இப் பள்ளிச் சந்தங்கள் முன்

38. புடைய காணி ஆளரைத் தவிரக்குடி நீக்கி இப்பள்ளிச்
      சங்கத்தார்க்கே காணியாக குடுத்தோமென்றும்

39. கெயமாணிக்க வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துச் சோழகுல
      லல்லிப்பட்டன த்து ஸ்ரீ சைலேந்த்ர சூடாமணிவ

40. ர்ம்ம விஹாரமான ராஜராஜப்பெரும்பள்ளிக்குப் பள்ளி
      நிலையும் பள்ளி விளாக மும் உட்பட்ட எல்லைகீழ்

41. பாற்கெல்லை கடற்கரையில் மணற்குன்றுட்பட மேற்கும்
      தென்பாற்கெல்லை புகை

42. உணிக்கிணற்றுக்கு வடக்கும் இதன்மேற்கு திருவீரட்டான
      முடைய மஹா தேவர் நிலத்து

43. க்கு வடக்கும் இதன் மேற்குப் பரவைக்குளத்து மாராயன்
      கல்லுவித்த குளத்தில் வடகரை மேற்கு நோ

44. க்கி காரைக்காற்ப் பெருவழியுற வடக்கும்
      மேற்பாற்கெல்லை காரைக்காற்ப் பெருவழிக் கிழக்கும்

45. வடபாற்கெல்லை சோழகுல வல்லிப்பட்டனத்து நிலம்
      வடகாடன்பாடி எல்லைக்குத் தெற்கும் ஆகஇன்