பக்கம் எண் :

24மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

(இது பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்து. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறைக் கிராமத்தில் ‘நாலு மூலைக் கேணி’ என்னும் மாற்பிடுகு பெருங்கிணற்றுச் சுவரில் எழுதப்பட்டுள்ளது. இதன் வாசகத்தைக் கீழே காண்க.)

கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய்.

(இது வட்டெழுத்து. ஒருகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட எழுத்து இது. இவ்வெழுத்தின் வாசகத்தை கீழே காண்க.)