பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 251

2. ழஞ்சு பொன் வைத்து பதின்............ல் இவ்வெண்ணை
     உள்ளிட்டன்றி எம்மூரவர் நிசதி ஆழாக்கும் குடு..........

3. ........காலமும் முட்டாமல் அட்டுவிப்பார்களாகவும் ஸ்ரீ........

14-ஆம் ஆண்டு

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா, களத்தூர், முன் குடுமீசுவரர் முகமண்டபத்துத் தரையில் உள்ள கல்லில் எழுதப்பட்ட சாசனம்.

நந்திவர்ம மகாராசனின் 14-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சாசனம், களத்தூர் பெருமக்கள் மேற்படி ஊர் ஏரியின் வருவாயிலிருந்து மூன்றில் ஒரு பகுதியைக் கோயிலுக்குத் தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசனம்14

1. ஸ்வஸ்திஸ்ரீ | நந்திவர்ம
2. மஹாராஜற்குப்
3. பதினாலாவது களத்
4. தூர்க் கோட்டத்து கள
5. த்தூர் பெருமக்கள் (பங்)
6. (கானா) (ட்bடயில்)...
7. ....த்தாந் ஏரிப்பாத்
8. து கோயிலாக பரமே
9. ஸ்வரன் முன்பாக பெ
10. ருமக்களும் கடவமூன்
11. றில் ஒன்றும் பரமே
12. ஸ்வரன் சுக்ருகம். ||

15-ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி தாலுகா, தளவானூர், “குகைக் கோயிலில்” தூணில் உள்ள சாசனம்.

விஜயநந்தி விக்ரமவர்மனின் 15-ஆம் ஆண்டு இடப்பட்ட இச்சாசனம், வெண்பேட்டில் இருந்த இக்கோயில் ஊழியர் ஒருவர், மோடன் என்பவரிடம் ஒரு கழஞ்சு பொன் தானம் செய்ததைக் கூறுகிறது.