பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 253

17-ஆம் ஆண்டு

செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதூர் தாலுகா, மாங்காடு கிராமம், வள்ளீஸ்வரர் கோயில் தரையில் உள்ள கல் எழுத்துச் சாசனம் :

“கோவிசைய நந்தி விக்ரம பருமரின்” 17-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், இக்கோயிலுக்குக் குன்றத்தூர் செழியவாணியர் திருவாதிரையிலும் தலையு வாவிலும் (அமாவாசையிலும்) பூசைக்காகத் தானம் செய்யததைக் கூறுகிறது.

சாசன வாசகம்18

1. ஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிரம பருமருக்கு யாண்டு
    பதினேழாவது புலி

2. யூர்க் குடிக்கோட்டத்துக் குன்றத்தூர்ச் செழிய வாணியர்களோ

3. ம் திருவாதிரையுந் தலைவாவும் திங்கள் நிலவியுங் காட்டு
     வோ
4. மானோம் திருவெள்ளி கீழுடைய சபையோம்.

18-ஆம் ஆண்டு

காஞ்சீபுரத்து உலகளந்த பெருமான் கோயிலின் தென் புறத்தின் தரையில் உள்ள கல் சாசனம். கடைசியில் சில பகுதிகள் இக்கல்லின் பின்புறத்தில் இருக்கவேண்டும். கல், தரையில் புதைக்கப் பட்டிருப்பதால் பின் பகுதி எழுத்துப் படிக்காமல் விடப்பட்டுள்ளது.

இதில், விடேல் விடுகு குதிரைச் சேரி என்னும் கடைத் தெருவில் வாணிகஞ் செய்வது பற்றிக் கூறப்படுகிறது.

சாசன வாசகம்19

1. ஸ்வஸ்தி ஸ்ரீ தெள்ளாற் றெறிந்த நந்
2. திப் போத்தரையர்க்கு யாண்டு ப
3. தினெட்டாவது அநுத்தரப் பல்ல
4. வரையன் விண்ணப்பத்தாற் கா
5. டு பட்டி தமிழ்ப் பேரரைய னா