பக்கம் எண் :

262மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

14. த்து.........
15. ............
16. மஹாதேவ
17. ....அர்ச்சனாபோக
18. .....க்காளன் அர்ச்சி
19. த்துண் பானாகக்கா
20. ......குப்பணித்......
21. .......தலுட்டாங் கண்
22. டருள திருக்கோயி
23. லிற் படாரர் திருவடி
24. க்கீழை சிலாலேகை
25. செய்து குடுக்க இற்
26. நீக்கி........

22-ஆம் ஆண்டு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா. திருவைகாவூர், வில்வநாதேசுவரர் கோயில் முன் மண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம்.

திருவைகாவூர் ஈசுவரருக்கு வண்ணக்கவிளகம் என்னும் 11/2 வேலி நிலம் தானம் செய்யப்பட்டதை இச்சாசனம் கூறுகிறது. இது பழைய சாசனத்தின் படியாகும். இதில், திருவைகாவூருக்குத் திருபுவன மாதேவி சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரைக் கூறுகிற படியால், இப்பெயர் ஏற்பட்ட பிற்காலத்தில் இச்சாசனம், பழைய சாசனத்தைப் பார்த்துப் படி எடுக்கப்பட்டது போலும்.

சாசன வாசகம்35

1. ஸ்வஸ்திஸ்ரீ நந்திவர்ம மராஜற்கு யாண்டு இருபத்
     திரண்டாவது திருவைய்காவு

2. டைய மஹாதேவற்கு திருநொந்தா விளக்கும் அமுது
     படிக்கும் உபையம்வை

3. ய்க்க சந்திப்பெலியார் திரிபுவனமாதேவிச் சருப்
    பேதிமங்கலத்

4. து ஸபையார் பக்கல் பொன் குடுத்துப் பொலி கூலிக்குச்
     செல