பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 263

5. வாக காசுகொள்ளா ஊற்கீழ் இறையிலியாக மணலிடில்
     வேலி

6. யாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் 11/2
     இன்னிலம் ஒன்ற

7. ரையும் இறக்காதான் திருவடி இரண்டு மெந்தலை மேலின
     இது இறக்குவாந்தங்க

8. ளம்மைக்குத் தாநேய் மினாளன்|| இது கல் வெட்டுப்படி

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா, திருவிடை மருதூர், மகாலிங்க சுவாமி கோயிலின் வடக்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம்.

“காடுபட்டிகள் நந்திபோத்தரையர்” திருவிடைமருதூர் கோயிலுக்குத் தானம் செய்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது. இந்தக் காடுவெட்டி நந்திப்போத்தரையரை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுகிறார்கள். ஆனால் இரண்டாம் நந்திவர்மனுக்குப் பொருந்தும். இந்த பழைய சாசனம், பிற்காலத்திலே பரகேசரிவர்மனுடைய 4-ஆம் ஆண்டில் படியெடுத்து எழுதப்பட்டது. பரகேசரிவர்மன் என்பவர் உத்தமச்சோழராக இருக்கக்கூடும்.

சாசன வாசனகம்36

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு 4-ஆவது
     நாள் 3000205னால் திருவிடைமருதில் தேவர்
     நாடகசாலையே இத்தேவர் ஸ்ரீகார்யம் திருத்தக் கடவ
     திரைமூர் சபையோரும் திருவிடை மருதில் நகரத்தாரும்
     திருக்கோயிலுடையார்களும் தேவ

2. ர் கணக்கு மருதன் பிரமகுட்டனும் ஸ்ரீகார்ய மாய்கின்ற
     பூசலான் குடையாரும் இருந்து தேவற்கு வைய்த்த
     பொலியூட்டினால் வைத்த விளக்கு ஆராய்ந்த இடத்து
     இந்த ஸ்ரீ கோயில் கற்றளி எடுப்பதற்கு
     முன்பொலியூட்டுக்குப் பிரமாணமாய் உள்ள கற்கள்

3. எல்லாம் அடிமனைக்கீழே இட்ட கல்லின்படி எடுத்துக்கொண்டு
     இட்டமையில் முன் படி மேலே கன்மேல் வெட்டிக்
     கொள்க வென்று ஏவக் கன்மேல் வெட்டினபடி காடு
     பட்டிகள் நந்திப்போத்தரை