தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 273 |
மாறன் பாவையார் சாசன வாசகம்45 1. க்கு பல்லவ தில கு 2. லத்து நந்திப் போத் 3. தரையர் மஹாதேவி 4. யாரான அடிகள் கண் 5. டன் மாறம் பாவையா 6. ர் வைத்த பொன் அறு 7. கழஞ்சே காலால் பூ 8. வில் கழஞ்சின் வா 9. ய்யரைக்கால்ப் பொ 10. ன்னாக வந்த பலி 11. சை பூவில் முக்காலே ஐஞ் 12. சுமா இப்பொன் கொண்டு ஐ 13. ப்பிகை விஷூவும் சித் திரை 14. விஷூவும் திருமேனி யாட 15. நெய் பால் தயிர் ஐஞ் ஞாழி 16. ச் செய்தும் பரிபாரமடங்க 17. திருவமிர் தரிசி பதக்கு நா 18. னாழி இவ்வெவ்வை இளநீர் 19. வாழைப் பழஞ் சற்கரை இ 20. ருபது செய்தும் நறும்பூச் 21. சாந்து குங்கிலிய முங்கொ 22. ண்டாராதிக்கவும் இந் நாளா 23. ல் பிராமணர் ஐம்பதின் மரு 24. ம் திருக்கோயில் பணி செய் 25. யும் மாணிகள் ஐவ்வரும் 26. அடிகள் மாரும் பணி செய் 27. மக்களும் உண்பதாக வைத் 28. தேன் எய்யினாட்டுத் தேவ 29. தானம் சிரிகண்ட புர 30. த்து அறுவை வாணி 31. கர் இப்படி அறுதிங் 32. கள் வார மராய்வதாக 33. வைத்தேன் கண்டன் மா 34. றம் பாவையேன் இது ப 35. ல்மாஹேஸ்வர ரிர 36. க்ஷை. |